களுத்துறை என்பது இலங்கையின் தென்மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள நகரங்களில் மிகவும் நீண்ட வரலாற்று பின்புலத்தை உடைய அழகான நகராகும். அவ்​வழகு மிகவும் ​மேலோங்கி இருப்பது கடலை முத்தமிடுவதற்கு வருகை தருகின்ற களுகங்கையும், ஒரு கிலோ மீட்டரளவு தூரத்திற்கு பரந்து சென்றுள்ள கடலேரியும், பாலங்கள் இரண்டையும் இணைத்து ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள தீவினாலும் ஆகும். (என்றாலும் கடந்த வெள்ள நிலைமை காரணமாக இந்த கடலேரியின் அழகு குறைந்துள்ளது). இடது கரையில் அமைந்துள்ள போதி பூஜை பூமி மற்றும் மேல் பாறைப்படியில் இருந்து மேலெழுந்துள்ள தூபி நகரத்​தின் அழகை மெம்மேலும் வர்ணமயமாக்குகின்றன. இறந்தகாலத்தில் களுத்துறையில் தோணித்துறைமுகம் ஒன்று இருந்துள்ளது.

அதனால் அதனை அண்டிய பிரதேசத்திற்கு “களுதொட” என குறிப்பிடப்பட்டது பின்பு “களுத்துறை” என மாறியுள்ளதாக வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிற்கு 40 கிலோ மீட்டரளவு தெற்கில் களுத்துறை நகரம் அமைந்துள்ளது. அதைப்போல அரை நாகரிகமான, மத்தியதரமான கல்வியறிவை உடைய நகரமாகும். இது ஒரு முக்கியமான வாசனைச்சரக்கு விற்பனை மத்தியநிலையமாக இருப்பதுடன் அதனுடைய பெயர் உருவாக்கப்பட்டுள்ளது களு கங்கை எனும் வசனத்தை அடிப்படையாகக் கொண்டாகும். பதினோராம் நூற்றாண்டில் தென் இந்திய இளவரசரின் கட்டளைப்படி இந்நகரம் தற்காலிகமாக தலைநகராக மாற்றப்பட்டது. இவ்வலயத்தில் முன்பு தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளதுடன் விளைச்சல் உள்ளக மற்றும் வெளி வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதைப்போலவே, ஆட்சி நடவடிக்கைகளுக்காக போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இறந்தகாலத்தில் இருந்தே அரண்களை அமைத்தமையாலும் இப்பிரதேசம் பிரபலமாகி உள்ளது. 38 மீட்டர் நீளமான களுத்துறைப் பாலமானது களுகங்கை பொங்குமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளதுடன் அது நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு எல்லையை இணைக்கின்ற பிரதாக தொடர்பாகும். அதைப்போலவே, இது இலங்கையின் முதல் கொங்கிரீட் பாலமும் ஆகும். எமது வரலாற்று நூல்களில் களுத்துறை பிரதேசம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் சொற்பமாகும். என்றாலும், தியகம எலமோதர பிரதேசத்தில் களுகங்கைக்கு அருகில் அமைந்துள்ள, கி.பி. முதலாம் நூற்றாண்டிற்கு அல்லது கி.பி. முதலாம் நூற்றாண்டிற்கு சொந்தமானது என கால நிர்ணயம் செய்ய முடியுமான பாறைக் கல்வெட்டானது களுத்துறை பிரதேசத்தில் குடியிருப்புக்கள் இருந்தமைக்கான ஆதாரமாகும்.

  -தியகம கல்வெட்டு-

இந்த தியகம கல்வெட்டானது, கற்பாறை ஒன்றின் உச்சியில் பொறிக்கப்பட்ட நான்கு வரிகளைக் கொண்டதாகும். இது தொடர்பான முதலாவது ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் விசூ எட்வர்ட் முலர் என்னும் தொல்பொருள் ஆய்வாளர் மூலமாகும். அவர் 1883 ஆம் ஆண்டில் தமது Ancient Inscription in Ceylon எனப்படும் ஆய்வுக்கட்டுரையில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விதத்தில் சங்கைக்குரிய வஸ்கடுவே சுபூதி தேரரின் உதவியுடன் இக்கல்வெட்டை தேடிக் கண்டுபடித்ததாகவாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பெயர் குறிப்பிடப்படுகின்ற சில நபர்களுக்குச் சொந்தமான தோணித்துறைமுகம் மற்றும் வயல்களை “மகா காள மகா விகாரைக்கு” அன்பளிப்புச் செய்தமையாகவாகும். இதில் “களனிய” எனப்படுகின்ற வர்த்தக மத்தியநிலையம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் களுத்துறை பிரதேசத்தில் வியாபாரம் மற்றும் விவசாய பொருளாதாரம் ஆகியவை அபிவிருத்தி அடைந்த நிலையில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. (மூலாதாரம் –

களுத்துறை மாவட்ட மத மற்றும் கலாச்சார கிரந்தம் ; களுத்துறை சிறிசற)சுற்றுளா கவர்ச்சி மிக்க இடங்கள்

  • களுத்துறை போதி – 2320 வருடங்களை விடவும் மிகவும் பழமையான இந்த போதியானது உலகில் உள்ள பழமையான ​ஆவணப்படுத்தப்பட்ட விருட்சமான ஶ்ரீ மகா போதியின் இரண்டாவது கிளையின் கன்றிற்கு உரியதாகும். போதி வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் களுத்துறை விகாரை வளாகத்தின் மேல் பாறைப்படியில் வளர்ந்துள்ளது அந்த முப்பத்திரெண்டு விதைவிருட்ச போதியாகும்.

    • களுத்துறை விகாரை – களுத்துறை பாலத்தின் வலது மூலையில் 03 மாடிகள் உயரமான பௌத்த பன்சலையான களுத்துறை விகாரை அமைந்துள்ளதுடன், 1960 இல் அமைக்கப்பட்ட அது உலகிலுள்ள உட்குழிவுடன் கூடிய ஒரே ஒரு விகாரையாகும்.
    • களுத்துறை அரண் – களுத்துறையில் அமைந்திருந்த அரணானது 1622 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர்களால் அமைக்கப்பட்டதாகும். நிகழ்காலத்தில் அவ்வரணை காணமுடியாமல் உள்ளது.

    • ரிச்மண்ட் மாளிகை – 1896 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும்.

    பிரித்தானிய முடிக்குரிய குடி​யேற்ற நாடாக இலங்கை இருந்த காலத்தில் முதலியாராக திக​ழ்ந்த என்.டி. ஆதர் டி சில்வா விஜேசிங்க சிறிவர்தன அவர்களின் மாளிகையானது ரிச்மண்ட் மாளிகை எனப்படுகின்றது. அது களுத்துறை பலாதொடையில் 42 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் இலங்கையில் அறங்காவலர் முதலீட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வரலாறு ஆதர் டி சில்வா அவர்கள் ஒரு தடவை இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுளாவின் போது கண்ட அரச மாளிகை ஒன்று தொடர்பாக மனம் கவரப்பட்டதன் காரணமாக இந்த அரண்மனையை அமைத்ததாக தகவல் குறிப்பிடப்படுகின்றன. அதற்கமைய அமைக்கப்பட்ட ரிச்மண்ட் மாளிகை கட்டிடத்திற்கு குடியேறியமையானது, ஆதர் டி சில்வா அவர்களால் 1910 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அவரது திருமண விழாவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து 31 வருடங்கள் குழந்​தைகள் இல்லாமல் தனது மனைவியுடன் ரிச்மண்ட் மாளிகையில் வாழ்ந்து வந்த ஆதர் டி சில்வா அவர்கள், ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் 1941 ஜூலை மாதம் 4 ஆம் திகதி நொத்தாரிசு எஸ்.ஜே.எஸ். கதிரகாமர் முன்னிலையில் கையொப்பம் இட்டு, ரிச்மண்ட் மாளிகை உட்பட தனக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் இலங்கையின் அறங்காவலர் முதலீட்டு திணைக்களத்திற்கு கையளித்துள்ளார். அதாவது, இந்த மாளிகையை அவருடைய மறைவிற்குப் பிறகு அநாதை குழந்தைகளுக்காக பாதுகாப்பை வழங்கக் கூடிய இடமாக மற்றும் ஏனைய தோட்டங்களின் வருமானங்களை அப்பிள்ளைகளின் தாபரிப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திலாகும். மனை ரிச்மண்ட் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்கள் வெளிநாட்டு இராச்சியங்களில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது. கட்டிடத்திற்கு அவசியமான செங்கற்கள் மற்றும் ஓடுகள் இந்தியாவில் இருந்தும், தேக்கை மற்றும் சிந்தூர பலகைகள் பர்மாவில் இருந்தும், ஜன்னல் கண்ணாடிகள் போன்றவை இத்தாலியில் இருந்தும் மற்றும் குளியலறை மற்றும் வீட்டு உள்நில களிமண் பலகைகள் இங்கிலாந்தில் இருந்தும் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த கட்டுமானப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து களுத்துறைக்கு கப்பல்கள் மூலமும், அங்கிருந்து களுகங்கையின் ஊடாக படகுகள் மூலமாகவும் மாளிகை கட்டப்படுகின்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மனையின் முழுமையான வாயில்களின் எண்ணிக்கை 99 ஆகும். ஜன்னல்களின் எண்ணிக்கை 38 ஆகும். கீழ் மாடியில் மற்றும் மேல் மாடியில் உள்ள அறைகளின் எண்ணிக்கை 14 ஆகும். அதில் கீ​ழ் மாடியில் 05 அறைகளும், அலுவலக அறைகள் 02 உம் புகைப்பட அறை ஒன்றும் நடன அறையும் உள்ளன. இதற்கு மேலதிகமாக புகுமுக மண்டபம், நிலாமாடம், நடு அமர்வறை மற்றும் நடு முற்றம் ஆகியவற்றை அங்கு காண முடியும். மேல் மாடியில் 06 அறைகளும், குளியலறையுடன் கழிப்பறைகள் 04, நிலாமாடம் ஒன்று மற்றும் இன்னுமொரு வெற்று வெளி ஒன்றும் உள்ளது. மேல் மாடிக்கு ஏறுவதற்காக படிக்கட்டுக்கள் இரண்டு உள்ளதுடன் அதில் ஒன்று சேவகர்களின் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேல் மாடிக்கு ஏறுகின்ற படிக்கட்டிற்கு சற்று மே​ல் பகுதியில், இரண்டிற்கு பிரிந்து செல்கின்ற விதத்தில் கட்டப்பட்டுள்ளது. சுவர் ஒன்று ஒரு அடிக்கு அதிகமாக அகலமாகவுள்ளதுடன் அதன் மத்தியில் வெற்று வளி தங்குக் கூடிய விதமாக பலகை கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு அதில் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா ரிச்மண்ட் மாளிகையின் பூங்காவில் பூரணப்படுத்தப்பட்ட குளம் ஒன்றை காணக்கூடியதுடன் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள சிங்கத்தின் முகம் மூலம் குளத்திற்கு நீர் வழிந்து வருகின்ற விதத்தில் அது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதைப் போலவே, கிரேக்க வெதுக்குச் சிற்ப கலைக்கு சமனான பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகள் பண்ணிரண்டு மற்றும், முதலியாரின் படுக்கை அறைக்கு முன்நோக்கி சிறு குழந்தைகள் நான்கு பேரின் மற்றும் அதன் மத்தியில் குழந்தையை தாழாட்டுகின்ற தாயின் சிலையையும் இந்த பூங்காவில் காண முடியும். நிகழ்கால நிலைமை தற்பொழுது இங்கு ரிச்மண்ட் மாளிகையானது முன் பிள்ளைப்பருவத்தை மேம்படுத்தும் மத்தியநிலையம் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கான பராமரிப்பு மத்தியநிலையமாக திகழ்கின்றது. (விகிபீடியா, இலவச கலைக் களஞ்சியத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன)

களுத்துறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரான வஸ்கடுவை பௌத்த மற்றும் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்ப மத்தியநிலையமாக பிரசித்திபெற்ற ஊராகும். 19 ஆம் நூற்றாண்டில் பரவலடைந்த வெஸ்லுயன் மிசனரி இயக்கத்திற்கு சவாலாக ஒன்று சேர்ந்த பௌத்த பிக்குகளின் மையமாக திகழ்ந்தது வஸ்கடுவை கிராமப் புறமாகும். திபூசு மகாதேரர் அவர்கள் பிறந்தது இந்த அழகிய கிராமப் புறத்திலாகும். இயற்கையைப் போலவே வரலாற்றுச் சம்பவங்களை தேடிப் பார்க்கும் போது முக்கிய விடயமாக இருந்தது ஶ்ரீ சுபூதி விகாரையாகும். அங்கு இருந்த ஶ்ரீ சுபூதி தேரர் அவர்கள் மிகமுக்கியமான தேரர்களில் ஒருவராவார்.

தாய்லாந்து நாட்டின் இளவரசர் பிக்குவாக மாறியதும் வஸ்கடுவை ஶ்ரீ சுபூதி விகாரையில் என்பதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயமாகும். மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் கடலோரத்தை எல்லையாகக் கொண்ட பிரதேசம் வஸ்கடுவை என்ற நிலமாகும். மிகப் பாரிய மூங்கில் காடாகத் திகழ்ந்த இப்பிரதேசம் பிற் காலத்தில் அந்த மூங்கில் மரங்கள் மூலம் உருவாக்கப்பட்ட புல்லாங்குழல்களால் ஏற்படுத்தப்பட்ட ஒலி புல்லாங்குழல் ஒலியாகும் (வஸ் தடுராவய). அந்த “வஸ் தடுராவய” பிற்காலத்தில் வஸ்கடுவை என்று மாறியதாக மூத்த மனிதர்களால் கூறப்படுகின்றது. அநுராதபுரத்தின் ஜய சிறி மகா  போதியைத் தவிர நாளாந்தம் அநேகமான மக்களின் கௌரவ பூஜை வழிபாடுகளுக்கு பயன்படுத்தக் கூடிய விருட்சம் என்றால் அது களுத்துறை போதியாகும். அதைப் போலவே, களுத்துறை போதிக்கு அருகால் வழிந்தோடுகின்ற பிரதான நதிகளில் ஒன்றான களுகங்கை அமைந்திருப்பது மிகவும் முக்கியமான விடயமாகும். இயற்கை வளங்கள் என்ற விதத்திலும் இப்பிரதேசம் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. அதைப் போலவே, சுங்கான் களி படிவுகள் இப்பிரதேசத்தில் உள்ளமையினாலாகும்.  இந்த சுங்கான் களிகளால் கைத்தொழில்களை மேற்கொள்வதற்கும், அதற்காக பாரியளவில் ஈடுபட்டு இருப்பதும் அதற்கு முக்கிய காரணியாகும். அதைப் போலவே, மங்குஸ்தான் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வரக்கூடிய நகரம் களுத்துறையாகும்.

வஸ்கடுவை பிரதேசத்திற்கு போர்த்துக்கேயர்களால் வழங்கப்பட்ட மாபெரும் அன்பளிப்பு கள் உற்பத்தி கைத்தொழிலாகும். இந்த கைத்தொழில் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முக்கிய காரணியாக உள்ளது. வஸ்கடுவை ராஜகுரு ஶ்ரீ சுபூதி விகாரை   வஸ்கடுவை ராஜகுரு ஶ்ரீ சுபூதி மகாநாயக்க தேரர் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்ற கபிலவஸ்து புனித பண்டமானது வணக்கத்துகரிய ஶ்ரீ சர்வங்ஞதாதுன் தேரர் அவர்களுக்குப் பின்பு வஸ்கடுவை வாசிஸ்ஸர, வஸ்கடுவை சீலவங்ச ஆகிய தேரர்களின் தலைமையின் கீழ் காணப்பட்டு பின்பு நிகழ்காலத்தில் கொடஹேனை தீபதுப்தமாராம தாய் ரஜமகா விகாரை மற்றும் வஸ்கடுவை ராஜகுரு ஶ்ரீ சுபூதி விகாரை உட்பட பல விகாரைகளின் அதிபதி அமரபுற ஶ்ரீ சம்புத்த சாசனோதய மகா சங்க சபையின் சங்கைக்குரிய மகாநாயக்க சாஸ்திரபதி வஸ்கடுவே மகிந்த வம்ச மகா தேரரின் தலைமைக்கு உட்பட்டுள்ளது. நிகழ்கால மகா தேரர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வஸ்கடுவை ஶ்ரீ சுபூதி  மகா நாயக்க தேரர் அவர்கள் வருகை தந்த வஸ்கடுவை அபிநவாராம (தற்கால ராஜகுரு ஶ்ரீ சுபூதி விகாரை) விகாரைக்கு அவசியமான அனைத்து பகுதிகளையும் முழுமையாக உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த மக்களுக்களின் அளப்பரிய கௌரவத்திற்கு உள்ளான விகாரையாக மாற்றமடைந்து, மதக் கட்டளைகளின் மேம்படுத்தலுக்காக மாபெரும் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய இடமாக அமைந்துள்ளது. ராஜகுரு ஶ்ரீ சுபூதி மகாநாயக்க தேரர் அவர்கள் (1835-1917) இலங்கை சாசன (மதக் கட்டளை) வரலாற்றில் காணப்பட்ட சிரேஷ்ட தேரர்களில் ஒருவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டில் பாளி மொழி மற்றும் புத்த தர்மம் தொடர்பாக தாராளமான கௌரவன்பிற்கு உள்ளான அண்ணாரின் பெயர் இலங்கை வரலாற்றில் சில விடயங்களுக்காக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. அண்ணார், முடிக்குரிய குடியேற்ற நாட்டு ஆட்சியால் இந்நாட்டின் கீழைத்தேய கல்வி முறை சரிவடைந்திருந்த யுகத்தில், அக்கல்வி முறையை​ மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அளப்பரிய சேவையை ஆற்றியதுடன், நூலாசிரியராக மற்றும் பதிப்பாசிரியராகவும் உள்நாட்டு வெளிநாட்டு புத்திமான்களுக்கு கல்வி ஞானத்தை பெற்றுக் கொடுத்த  ஆசிரியராகவும், பெல்முடுல்லை திரிபிடக பௌத்த சமய கோட்பாடுகளை தாபிப்பதற்கு தொடர்புபட்ட ஒப்புவிப்பு செயற்படும் மகா தேரராகவும் முக்கிய பணியை நிறைவேற்றயதுடன்,அண்ணாரின் வாழ்நாளில் இடம்பெற்ற சிரேஷ்டமான சாசன (தர்ம) செயற்பாடானது தனது ஞான சக்தியை பயன்படுத்தி மாபெரும் தைரியத்துடன் புத்த பெருமானின் சந்​தேகமற்ற ஶ்ரீ சர்வங்ஞ (யாவும் அறிந்த) உத்தம தாதுக்கள் 21 ஐ ( இந்நாட்டிற்கு வரவழைத்து இலங்கை பூமியை மேலும் புண்ணிய பூமியாக மாற்றுவதாகும். புத்தர பெருமானார் குசினாரா நகர மல்லவ அரச குழந்தைகளின் ஜீவனம் எனப்படுகின்ற சல் பூங்காவில் பரிநிர்வாணம் அடைந்த பின்பு தகனம் செய்யப்பட்டு ஏழு தினங்களுக்கப் பின்பு நினைவுச் சின்னங்கள் (தாது) பிரிவிடுவது இடம்பெற்றது.

(மூலாதாரம் – வளங்கள் புறவுரு, களுத்துறை பிரதேச செயலகம்) கிராமங்களின் உருவாக்கம்…… களுத்துறை பிரசேத்தில் அரச காலங்களில் இருந்தே ஆரம்பமான கிராம நிர்மாணங்கள் தொடர்பாக நாட்டாரியல் மற்றும் நாட்டார் கதைகள் மூலம் இதுவரை மக்கள் மத்தியில் நினைவுகள் நிலவுகின்றன. அதற்கமைய கிராமங்கள் பல உருவாகியமை தொடர்பான தகவல் பின்வருமாறு. மெஸ்டிய ஒல்லாந்தர்களின் காலத்தில் பண்டாரவத்தை காணியில் பழைய தேவாலயச் சிதைவுகளில், அங்கு காணப்பட்ட கடவுள்களின் கைத்தடி-“யஷ்டிய” (ஊன்றுகோல்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடவுளிற்கு “முரு” என்கின்ற பெயர் ஒத்துக் காணப்பட்டதால் முரு + யஷ்டிய (கைத்தடி) என்பது மெஸ்டிய என மாற்றமடைந்துள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றது.

கோனதூவ அடிக்கடி நீரால் நிரம்பிய வயல் வெளியால் சூழப்பட்ட தீவொன்றில் தோற்றத்தை பெற்ற சிறிய கோனதூவ (மரைதீவு), மரை ஒன்றை எதிர்கொண்டமையால் உருவாகியமைக்கு காரணமாக அமைந்துள்ளது. இப்பிரதேசம் பெரிய ​கோனதூவ (பெரிய மரைதீவு), சிறிய கோனதூவ (சிறிய மரைதீவு) என்ற பெயரால் தற்பொழுது அழைக்கப்படுகின்றது. மெலேஙம 06 ஆவது புவனேகபாகு மன்னரின் காலத்தில் சோழ நாட்டில் இருந்து வருகை தந்த குத்துச் சண்டை வீரர்களுடன் இடம்பெற்ற போட்டியின் பின்பு அவர்களை அநுராதபுர பிரதேசத்தைச் சேர்ந்த களுகெடயா எனகின்ற நபர் தோற்கடித்துள்ளார். அவன் தனது சகோதரிகள் இருவருடன் அரசனை சந்தித்த வேளையில் அவனுக்கு விருப்பமானதைக் கேட்குமாறு அரசன் அவனிடம் கேட்டுக் கொண்டாலும், அவன் எதனையும் அரசரிடம் கேட்கவில்லை. அவனுடைய ஒரு சகோதரியான புவ​னேஷ்வரி என்பவள் தான் வசிப்பதற்காக காணித் துண்டு ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாள். அதற்கமைய 65 பிரதேசங்களில் அரைக் கலிங்கு நிலங்கள் அரசனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அப்பிரதேசம் மய்லனுவர்களின் கிராமம், மெலேஙம என்று அழைக்கப்படுகின்றது.

மஹரெக்ம மஹரெக்ம கிராமம் தொடர்பாக வரலாற்றுப் பின்னணி ஒன்று உருவாகாவிட்டாலும் கிராமத்தின் பெயர் உருவாகியமை தொடர்பாக  மரை ஒன்று தொடர்பான கதை ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது. அதற்கமைய மரை ஒன்றை பிடிப்பதற்காக பாரியொரு காப்பு (ரெக்ம) ஒன்றை பயன்படுத்தி உள்ளதாகவும் பிற்காலத்தில் அது மஹரெக்ம என அழைக்கப்பட்டதாக புராணங்களில் குறிப்பிடப்படுகின்றது.  இக்கிராமத்தில் விவசாயத்தை மையப்படுத்திய பொருளாதாரம் நிலவுகின்றதுடன் கீரைப் பயிர்ச்செய்கையும் இடம்பெறுகின்றது. இக்கிராமம் வாத்துவை கிராமத்தில் களுத்துறை வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

மாவல 16 ஆம் நூற்றாண்டில் ரைகம கோரளையில் இருந்து இறந்தகாலத்திற்கு சொந்தம் கூறுகின்ற இந்த கிராமம் மாவல கிராமமாகும். மக வல எனப்படுகின்ற பாரியொரு வனம் ஒன்று இருந்தமையால் மாவல என அறியப்பட்டதாகவும் தற்காலத்தில் மாவல, மாவல தெற்கு என நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒரே ஒரு வணக்கஸ்தளமான கொரஸ்தூவ புராண விகாரையானது ரைகம  கோரளையின் ஆட்சியாளனாக இருந்த ரைகம பண்டார மன்னனின் அரச காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மன்னனின் சுற்றுளா மாளிகை ஒன்று இக்கிராமத்தில் அமைந்திருந்ததாகவும், மன்னன் முகம் அலம்புவதற்கு பயன்படுத்திய தங்க அண்டாவானது விகாரைக்கு அருகில் புதிய கால்வாய்க்கு அண்டிய பாதி நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அது கொரஸ்தூவ என்ற பெயரில் பிரசித்தி பெற்றதாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்விகாரையில் பிரசித்தி பெற்ற தேரர்கள் காணப்பட்டனர். 175 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றிற்குச் சொந்தம் கூறக்கூடிய இப்பிரதேசம் களுத்துறை வடக்குப் பகுதியில் அமைந்துள்ளதுடன் அது மாவல தெற்கு என அழைக்கப்படுகின்றது. மாவல தெற்கு மற்றும் மாவல என நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் மாவல உருவாகியமை மேற்குறிப்பிட்ட விடயத்தின் அடிப்படையிலாகும். இப்பிரதேசத்திற்கு வரலாற்றுப் பின்புலம் ஒன்று உள்ளது. 1916 ஆம் ஆண்டளவு ஆரம்பிக்கப்பட்ட சுகிசுத்தாராம விகாரையின் விஷ்ணு தேவாலயம் மற்றும் பத்திரகாளி தேவாலயம் ஆகியவை மிகவும் பழைமை வாய்ந்தவை ஆகும். இங்கு வருடாந்த தேவமடு விழா இடம்பெறுகின்றது.

மொரொன்துடுவ சிங்கள இராசதானியின் எதிர்ச் சக்திகளை அழிப்பதற்காக மொரன்துடுவ கிராமத்தில் காவல் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்நிலையங்களை காவல் காப்பதற்காக காவலாளிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்கள் காவல் காத்த இடம் முரவுன்துடுவ எனவும் பிற்காலத்தில் மொரன்துடுவ எனவும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. விசால நிலப்பரப்பை உடைய இப்பிரதேசம் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசமாகும். விவசாய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. களுத்துறைக்கு 15 கிலோ மீட்டர் அளவான தூரத்தில் அமைந்துள்ளது. பொஹத்தரமுல்ல இறந்த காலத்தில் அப்பிரதேசத்தில் வசதி படைத்தவர்கள் வாழ்ந்ததாகவும், அதற்கமைய வசதி படைத்தவர்கள் இருந்ததால்  போசத்+தன+முள்ள என வசனத் தொடரில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வசனத்தில் இருந்து பொஹத்தரமுள்ள என இனங்காணப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் புராணங்கள் காணப்படுகின்றன. அதாவது, சிறிய கிராமமாக காணப்பட்ட இது தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் காலத்தில் நட்டப்பட்ட போதி மரம் ஒன்றின் பெயரை அடிப்படையாகக் கொண்டு, கிராமத்திற்கு போஅத்தரமுள்ள என பிரயோகிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இந்த கிராமம் பொஹத்தரமுள்ள என அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. பொதுபிடிய கி.பி. 1415 ஆம் ஆண்டளவு இறந்தகாலத்தை உடைய கிராமமாக பொதுபிடிய என்ற பெயர் காணப்படுகின்றது. கோட்டை யுகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பரெவி(புறா),கிரா(கிளி),கோகில(குயில்) சந்தேச – தூது காவியங்களின் மூலம் பொதுபிடிய வர்ணிக்கப்பட்டுள்ளது.

பரெவி சந்தேசவில் இருந்து…. கமின் தலா கினி மெலி சங்கங்                               நெடிய லவன் பெஹெய கள விலசின் குரு            மெடிய வசன் முஙுரு நொபஹள தணி துட                        சிடிய மெவன் ஙொபலு அஙனன் தகு                    பொதுபிடிய  கோகில சந்தேசவில் இருந்து…. திஙுராவயென் நெஙீ துஙு களு                                  செடிய வஙுரா ஙத மூண வெனி ஙத குரு                            மெடிய ஙுஙுரா பொரட தென தென ஙவ ரள                      பிடிய இதரா பலன் சபதினி சிட                               பொதுபிடிய கிரா சந்தேசவில் இருந்து…. கனலா உபுல் மல் ஙவஸா கெஸ்                             வெடிய பிதலா பொகுரு கரலா முதுஹர                             செடிய பெதலா ஙமன் வெத ஙவ பலு லிய             சிடிய நொபலா மிதுர யாஙன் மங                         

பொதுபிடிய அலங்காரமான பொதுபிடியவின் வலிமையான புயங்களை உடைய இடையர்களின் உருவ அழகை பார்த்தபடியே பயணிக்குமாறு தூது காவிய ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அழகை உடைய இக்கிராமம் ஆரம்பத்தில் கவுடுதூவ என அழைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர்களின் ஆட்சிக் காலத்தில் கருவா பயிரிடப்பட்டதாகவும், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் புலஹிங்ககே பிலிப்பு அப்புஹாமி முதல் குடியிருப்பாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரகும்பா மன்னனின் ஆட்சிக் காலத்தில் அவருடைய தேவபதிராஜ எனப்படுகின்ற அமைச்சரால் சதுர தேவாலயங்கள் (அல்லிய தேவால) இருபத்தி நான்கு அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான இடம் ஒன்று பொதுபிடிய கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த பாரம்பரிய மரபுரிமைகளை அந்த சதுர தேவாலயத்தில் பாதுகாக்கின்றதாகவும் இந்த கிராமவாசிகள் கூறுகின்றனர். புதுவருட சடங்குகள், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வை விழாவாக மேற்கொள்கின்ற இந்த கிராமத்தில் மிகவும் உயரமான பலகாரத்தை அமைக்க முடியுமானவர்கள் இன்றும் உள்ளனர். கலபுஙம பஸ்துன் கோரளையில் அமைந்துள்ள கலபுஙம கிராம உத்தியோகத்தர் தொகுதியில் 800 ஏக்கர் அளவு நிலத்தை உடையதாகும். 1989 ஆம் ஆண்டில் இதனை நிர்வாக வசதிக்காக கிழக்கு கலபுஙம, மேற்கு கலபுஙம என பிரிக்கப்பட்டது. வாய் மொழி ரீதியாக கூறப்படுகின்ற தகவல்களுக்கு அமைய அக்கிராமம் உருவாகி இருப்பது களு கங்கையுடன் தொடர்புபட்ட பாரிய கடலேரிக்கு அண்டியாகும். சாரா டி பொண்சேகா எனப்படுகின்ற சீமாட்டி ரைகம அரச மாளிகையுடன் தொடர்புபட்டு பணியாற்றி உள்ளார். அவருடைய பணிகளில் திருப்தி அடைந்த மன்னன், அச்சீமாட்டிக்கு விரும்பியதை கேட்குமாறு பணித்தான். அதற்கமைய கிராமம் ஒன்றிற்கு பெயரை வழங்குமாறு அவர் மன்னனிடம் கூறியுள்ளார். இவ்வாறு இக்கிராமத்திற்கு பெயர் உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றது. 1960 ஆம் தசாப்தமளவு பழைமையான இறந்தகாலத்தை உடைய கலபுஙம ரைகம கோரளைக்கு உரித்தானதாக காணப்பட்டது. அக்காலகட்டத்தில் வியாபாரத்திற்காக களு கங்கையானது வர்த்தகப் பாதையாக அமைந்திருந்தது. ஒரு காலத்தில் படகு, ஓடங்களை நிறுத்தி வைக்கும் படகுத்துறைமுகம் ஒன்று காணப்பட்டதாகவும், அங்கு பண்மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேசவாசிகளின் நினைவுகளில் தங்கி உள்ளன. கலபுஙம என்ற பெயருடைய இவ்விசாலமான கிராமம் கலமுல்ல, கொஸ்வெதே, அல்விஸ்வத்த, கஜுதூவவத்த, கரந்தன்கொட,  கிதுல்ஙஹதுடுவ, பட​சேனை, ஹேன்பிடிய ஆகிய சிறிய கிராமங்களை உள்ளடக்கியதாகும். இப்பிரதேசங்கள் உருவாகி இருப்பது பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்களைப் போலவே,  பயிர்ச் செய்கைக​ளை நோக்கமாகக் கொண்டும் என கூறப்படுகின்றது. நெல், இறப்பர், தென்னை பயிர்ச் செய்கைகளைப் போலவே இரத்தினக்கல்  கைத்தொழிலும் இப்பிரதேசவாசிகளின் ஜீவனோபாயமாகும். தெல்தூவ வடக்கில் மொரன்துடுவ கிராமமும்,  கிழக்கில் கலபுஙம மற்றும் பணாபிடிய கிராமமும், தெற்கில் வஸ்கடுவை மற்றும் நுககொடை கிராமமும்,  மேற்கில் பொதுபிடிய மற்றும் மாவல கிராமமும், எல்லையாகக் கொண்டு தெல்தூவ கிராமம் உருவாகி இருப்பது ஒரு காலத்தில் தீவாக இருந்த காரணத்தினாலாகும். சதுப்புக் கொத்துக்களைக் கொண்ட வயல்கள் மற்றும் கால்வாய்களும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன. இத்தீவில் அதிகளவாக ஈரப்பலாக்கள் காணப்பட்டதால் தெல்தூவ என்ற பெயர் கிடைக்கப் பெற்றுள்ளது.

அரியஙம, தேவிருஙம மற்றும் கோபியாவத்தை 100 ஏக்கர் அளவான நிலத்தை உடைய வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து 1872 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முன்நின்று பணியாற்றிய அரியவங்சாபிதான தேரர் அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக அரியஙம என்ற பெயரில் இக்கிராமம் அழைக்கப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் அரியஙம எழுச்சி பெறச்செய்யப்பட்ட கிராமமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. 05 ஏக்கர் நிலத்தை ஆயுர்வேதை மூலிகைளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஊனமுற்ற  இராணுவ வீரர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதால் தேவிருஙம என்ற பெயரிலும், அரியஙமவிற்குச் சொந்தமான அடுத்த பகுதியில் கோபிப் பயிர்ச்செய்கை அதிகமாக காணப்படுவதால் கோபியாவத்தை என்ற பெயரிலும்  அழைக்கப்படுகின்றன. இப்பிரதேசம் மூன்று கிராமங்களை ஒன்றிணைத்து உருவாகி உள்ளது.

வஸ்கடுவை சுய தொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் பிரிவொன்று வாழ்கின்ற வஸ்கடுவை கிராமத்தில் மூங்கில் மரங்கள் நிறைந்த காடு ஒன்று இருந்ததாகவும், மூங்கில்களால் வாள் அமைத்து கூர்மையாக்கி பயன்படுத்தி உள்ளமையால் வஸ்கடுவை என்ற பெயர் கிடைக்கப்  பெற்றுள்ளது. இக்கிராமம் பெரிய வஸ்கடுவை, சிறிய வஸ்கடுவை என்று பிரிந்து காணப்படுகின்றது. இங்கு வாழ்கின்ற மக்கள் தும்புக் கைத்தொழில், மீன்பிடிக் கைத்தொழில், கள் இறக்குதல், சுற்றுளா நடவடிக்கைகள் ஆகிய ஜீவனோபாயங்களில் ஈடுபடுகின்றனர்.

பரதூவ களுத்துறையில் இருந்து 11 கி​லோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரதூவ புராணங்களில் குறிப்பிட்டுள்ள விதத்தில் பாரியளவில் புறாக்கள் வாழ்ந்த காரணத்தால் பரதூவ என்று அழைக்கப்படுகின்றது.

தியஙம 05 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட சிலா ஆவணம் ஒன்று தியஙம பெளுணுஙலவிற்கு அருகில் அமைந்துள்ளமையால் தியஙம வரலாறு தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளன. அடிக்கடி ஈரலிப்புடன் காணப்படுவதால் நீரால் மூழ்கின்ற பிரதேசமாக இருந்தமையால் தியஙம என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெதியவல 1864 ஆம் ஆண்டளவு பழைமையான வரலாற்றை உடைய தெதியவல தொடர்பாக தகவல் மிகவும் பழைமையான விகாரை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தகவலின் அடிப்படையில் தெளிவாகின்றது. அப்பிரதேசம் தெதியவல என்று அழைக்கப்பட்டிருப்பது கரதிய மற்றும் மிரிதிய ஆகிய பெயர்களின் கூட்டமைப்பால் ஆகும் என்று மூத்தமக்களின் கருத்தாகும். இறந்தகாலத்தில் இருந்து இதுவரை மட்பாண்ட கைத்தொழிலிற்காக மூலப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டிருப்பது தெதியவல கிராமத்தில் இருந்தாகும்.

உங்ஙல்பட உங்ஙல்பட கிராமமானது மல்வத்தை, தூவேஙம, நெந்துன்ஙஸ்சேனை, ஜாவத்தை, பின்னகொடை, கபுசேனை, கீழ் மல்வத்தை, எந்திரிகெலய ஆகிய கிரமங்களை எல்லையாகக் கொண்டதாகும். மேட்டுப் பிரதேசத்தில் பாரிய கருங்கற்களைக் கொண்ட இப்பிரதேசம் உஸ்ஙல்கொடை என்றும், பின்பு உங்ஙல்பட என்று மாற்றம் அடைந்ததாகவும் மூத்த கிராமவாசிகள் குறிப்படுகின்றனர். உங்ஙல்பட பிர​தேசத்தில் அமைந்திருந்த மல்வத்தை ஆங்கிலெயரின் ஆட்சிக் காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் வெள்ளை நிறத்தவர் ஒருவரால் தாபரிக்கப்பட்டு வந்தது. மல்வத்தை என்ற பெயர் உருவாகி இருப்பது அதனை முதன்மைப்படுத்தியாகும். பழைழை வாய்ந்த மல்வத்தையில் ரஜ மகா விகாரை மற்றும் தேவாலயமானது 06 ஆம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க புனிதமான இடமாகும். மல் அஸ்னே விகாரை மற்றும் பத்தினி ​தேவாலயத்திற்கு பக்தர்கள் மத்தியில் அளப்பரிய நம்பிக்கை காணப்படுகின்றது. சிங்கள புது வருட உதயத்துடன் இவ்விடத்திற்கு வருகை தருகின்ற பக்தர்கள் புத்த பெருமானை வணங்கி ஶ்ரீ விஷ்ணு கடவுள் மற்றும் பத்தினி தேவிக்கு பூஜைகளை நடாத்தி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது புராண காலத்தில் இருந்து இடம்பெறுகின்ற சம்பிரதாயமாகும். அதன் மூலம் துன்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கப் பெறும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பலாதொ​ட களுகங்கை படகுத் துறைமுகமானது கோட்டை யுகத்தின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக​ பொருளாதார போக்குவரத்திற்காக முதன்மையான தளமாகக் காணப்பட்டது. வர்த்தகர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்திற்காக கப்பல்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் படகுத் துறைமுகத்தை வந்தடைந்தனர். களுகங்கைகு அண்மையில் காணப்பட்ட இப்படகுத் துறைமுகம் பிற்காலத்தில் பலாதொட என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணொருவர் மற்றும் கீரைக் கட்டு ஒன்றுடன் தொடர்புபட்ட கதை ஒன்றின் மூலமாகவும் பலாதொட என்ற பெயர் கிடைக்கப் பெற்றது என்பது கிராமவாசிகளின் கருத்தாகும். இப்பிரதேசம் வளம்பொருந்திய பிரதேசமாகும். தமது பண்டைய தொழிலை காத்து நிகழ்காலத்திலும் இப்பிரதேசத்தில் உயர்ந்த விதத்தில் புதிய அரிசி அறுவடைப் பண்டிகை நடாத்தப்படுகின்றது.

கலமுல்ல பரெவி சந்தேசவின் ஆசிரியர் கலமுல்ல கிராமம் தொடர்பாக மிகவும் அழகிய முறையில் வர்ணித்துள்ளார். அதனை குமாரதுங்க முனிதாஸ அவர்களின் பாதுகாக்கப்பட்ட நூலில் 68 ஆவது கவிதையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எக சுரஙன பெஹெஸர ருசிரின்                            துல்ல எக ஹக பஸின் வடவன செல என்             லொல்ல சத ஹக செகின் திது சரலம சிடி                            வெல்ல தெக நொம லெஸ  பரெவிது சந்த கல                 முல்ல அழகிய கலமுல்லவைக் கண்டு  தனது பணியை நிறைவேற்றுமாறு புறாவிற்கு தனது பணியை நிறைவேற்றுமாறு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறை பிரதேச செயலாளர் தொகுதியில் மேற்குறிப்பிடப்பட்ட கிராம உருவாக்கங்கள் தொடர்பான தகவல் நூல்கள் மூலமும் கிராமவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட  புராணங்களில் இருந்துமாகும். (மூலாதாரம் – கலாச்சார வளங்கள் புறவுரு)